கொரானா அச்சுறுத்தல்: தஞ்சைப் பெரிய கோயில் நடை மூடல்

தஞ்சை.மார்ச்.18

கொரோனா  வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தஞ்சைப்பெரிய கோயில் மார்ச்31ந் தேதி வரை மூடப்படுவதாக தொல்லியல் துறை  அறிவித்துள்ளது.

 சீனாவில் தொடங்கி உலகம்  முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில்  125க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து நாடு   முழுவதும்  கொரோன  தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில்  மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள்,மால்கள், வணிக நிறுவனங்கள்,பெரிய கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள்,கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் மார்ச் 31 வரை மூடப்படுவதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் பக்தர்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர்  கோயிலுக்கு வந்து செல்வதால்    இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தொல்லியல் துறை அறிவித்துள்ளது.  எனினும் கோயிலில் நடைபெறும் தினசரி பூஜைகளை  அர்ச்சகர்கள்  மேற்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கங்கை கொண்ட சோழபுரத்தில்  உள்ள  பெருவுடையார் கோயிலும்  பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *