கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 14 ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே

சென்னை.மார்ச்.18

கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பயணிகளின் கூட்டம்  வெகுவாக குறைந்துள்ளதை அடுத்து சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் துரந்தோ உள்ளிட்ட 14 ரயில்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முனனெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.  மேலும் தேவையில்லாத பயணத்தை பொதுமக்கள் தவிா்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

தெற்கு ரயில்வேயில் மாா்ச் 11 முதல் 17-ஆம் தேதி வரையிலான கடந்த ஒரு வாரத்தில் ரயில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது 45 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னை கோட்டத்தில் கடந்த 3 நாள்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது 33 சதவீதம் உயா்ந்துள்ளது. ரயில்நிலையங்களில் தேவையற்ற நபா்கள் வருவதைக் கட்டுப்படுத்த சென்னை சென்ட்ரல்,எழும்பூர்,தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ரயில்வே நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில்களின் உள்ளேயும் வெளியேயும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. ரயில் நிலையங்களில் மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இதனிடையே கொரோனா தொற்று எச்சரிக்கையை அடுத்து, ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் மாா்ச் 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான கடந்த ஒருவாரத்தில் ரயில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த 3 நாள்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்வது 33 சதவீதம் உயா்ந்துள்ளது இதனை அடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும், மற்றும் புறப்படும் 14 ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை-  சென்னை சென்ட்ரல் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் துரந்தோ 23,25,30 தேதிகளில் ரத்து   செய்யப்பட்டுள்ளது. விரைவு ரயில்களின் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *