2 தொகுதிகளுக்கும் பொதுப்பார்வையாளர்கள் நியமனம்

சென்னை, செப்டம்பர்-27

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு பொதுப்பார்வையாளார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்கு இயந்திரங்களை தயார்படுத்துவது, பாதுகாப்பு பலப்படுத்துவது போன்ற பணிகளில் தமிழக தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதிக்கு விஜயசுனிதாவும், விக்கிரவாண்டி தொகுதிக்கு வீரபத்துருவும் பொதுப்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் செலவின பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1 லட்சத்து 63 ஆயிரம் பயிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த சத்ய பிரதா, விக்கிரவாண்டி தொகுதியில் நான்கு பேரும், நாங்குநேரி தொகுதியில் இரண்டு பேரும் தற்போது வரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர் சரிபார்க்கும் திட்டத்தின் படி 12 லட்சத்து 11 ஆயிரம் பேர் பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *