கொரோனா வைரஸ்: சென்னையில் வீடு வீடாகச் சென்று கண்காணிப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை.மார்ச்.17

 சென்னையில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர், வீடு வீடாகச் சென்று  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்  கண்காணிப்பார்கள் என்று தமிழக உள்ளாட்சித்துறை   அமைச்சர் எஸ்.பிவேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த   ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சியின்  ரிப்பன்  கட்டடத்தில்  அமைந்துள்ள அம்மா மாளிகையில்   இன்று நடைபெற்றது.    ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து துறை அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டுமென்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 25 ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதனை பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும்.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சித்துறை, சுகாதரத்துறையுடன் இணைந்து செயல்படும். முறையாக சோப்பினை உபயோகித்து கைகள் மற்றும், முகங்கத்தை கழுவதன் மூலம் 80 சதவீதும் கொரோனா வைரசை தடுக்க முடியும் என சுகாதாரத்துறை கூறியுள்ளார்கள். ஆகவே அதனை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க உள்ளாட்சித்துறைக்கு  உத்தரவிடப்படுள்ளது. அதிகம் மக்கள் கூடும் இடங்களில்  கொரோனா விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுங்கள் வினியோகம் செய்யப்படும்.  

அனைத்து கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை வரும்  31ஆம் தேதி வரை மூட வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதை காவல்துறை உள்ளிட்ட அனைத்துறை அதிகாரிகளும் செயல்படுத்த வேண்டுமென்று  என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் கூடுமான வரை நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும், வழிப்பாட்டு தளங்களில் தெர்மோ ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதிக்க படுகிறது. அனைத்து பேரூராட்சிகள் , நகராட்சிகள் , ஊராட்சிகள் என உள்ளாட்சி அமைப்புகளில் 3லட்சத்து 50ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். தொற்று நோய் காலங்களில் குழுவாக பிரிந்து அவர்கள் பணியாற்றுவார்கள். கொரோனா வைரஸ் குறைவாக உள்ளது இருப்பினும் முழுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். வங்கி அதிகாரிகளிடமும் ஏ.டி.எம் போன்ற இடங்களில் கூடுதல் விழிப்புணர்வாக இருக்க கூறியுள்ளோம், தி.நகர் ரங்கநாதன் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமுள்ளது அதையும் கண்காணித்து வருகிறோம். கூடுமான வரை கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சென்னையில் மட்டும் 3000 குழுக்கள் உள்ளாட்சித்துறையில் உள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைபுகளில் கீழ் செயல்படும் குழுவினர் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று  கண்காணித்து வருகிறார்கள் குழுவிற்கு 50 வீடுகள்விகிதம். கொரேனா தடுப்பு நடவடிக்ககைள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *