சென்னை தி.நகரில் உள்ள வணிக நிறுவனங்களை மூட மாநகராட்சி அறிவுறுத்தல்

 சென்னை.மார்ச்.17

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள  வர்த்தக நிறுவனங்கள், கடைகளை மூட மாநகராட்சி  அறிவுறுத்தி உள்ளது.

 கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் ஆகியவற்றை மூடவேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில்  சென்னை புரசை வாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர் உள்ளிட்ட பெரிய கடைகள் இன்று மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் , ரங்கநாதன் தெரு உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில்   உள்ள கடைகளை மூடுமாறு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *