கொரோனா அச்சுறுத்தலால் புரசை சரவணா ஸ்டோர் மூடல் : மாநகராட்சி நடவடிக்கை

சென்னை.மார்ச்.17

 சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்  மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையால் மூடப்பட்டது.

கொரோனா நோய் தொற்று காரணமாக வரும் 31-ஆம் தேதி வரை, பள்ளிகள், வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனை ஏற்று, சென்னையில் இருக்கக்கூடிய பல்வேறு திரையரங்குகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அதிகப்படியான மக்கள் கூடக் கூடிய இடமான சென்னை புரசைவாக்கத்தில்  உள்ள  வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளை  மூடுமாறு  சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், வலியுறுத்தினார்கள்.

அதன்படி சரவணா ஸ்டோர் கடையை மூட வேண்டும் என்று அதிகாரிகள் அதன் உரிமையாளர்களிடம் தெரிவித்தனர்.  அதனை ஏற்றுக்கொண்ட சரவணா ஸ்டோர் நிர்வாகம், கடையை மூடியது. கடையில் இருந்த அனைத்து வாடிக்கையாளர்களும் பின்பக்கம் வழியாக வெளியேற்றப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *