ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 5 மடங்கு உயர்வு: மக்கள் கூட்டத்தை குறைக்க நடவடிக்கை

டெல்லி.மார்ச்.17

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக மும்பை,அகமதாபாத் உள்ளிட்ட முக்கியநகரங்களின் ரயில் நிலையங்களில்  நடைமேடைக் கட்டணம் ரூ.250 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து  ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ்  பரவுவதை தடுக்க மத்திய அரசு  தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரயில் நிலையங்களில் பயணிகளை  தவிர  மற்றவர்கள் வருகையை கட்டுப்படுத்த நடைமேடைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.  மும்பை,அகமதாபாத்,வதோரா,ராஜ்கோட், ரத்லம், மற்றும் பாவ்நகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரூ.10, ரூ.50 ஆக இருந்த நடைமேடைக் கட்டணங்கள் ரூ.50,ரூ,250 ஆக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரையில் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்  சென்ட்ரல்,  எழும்பூர் ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *