தங்கம் விலையில் மீண்டும் சரிவு : ஒரேநாளில் பவுனுக்கு ரூ.984 குறைவு

 

சென்னை.மார்ச்.17

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 984 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில நாட்களாக எற்றத் தாழ்வாக இருந்த தங்கம் விலை நேற்று பவுனுக்கு 224 ரூபாய் உயர்ந்திருந்தது. இந்நிலையில்  தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.984 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,820 ஆகவும், ஒரு பவுன் ரூ.30,560 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4011 ஆக உள்ளது.

வெள்ளியின் விலையிலும் இன்று கிராமுக்கு ரூ.2.70 குறைந்து கிராம் ரூ.38.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ 38,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *