கொரோனா வைரஸ் : தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு

சென்னை.மார்ச்.17

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள  தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா வைரஸ் நோய் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க, அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்ட சிறப்பு பணிக் குழு ஒன்றை அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரம்

 • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அரசு செயலாளர்,
 • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
 • நகராட்சி நிருவாகம் மற்றம் குடிநீர் வழங்கல் துறையின்
 • அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
 • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
 • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
 • தகவல் தொழில்நுட்ப துறையின் அரசு முதன்மைச் செயலாளர்
 • தொழில் துறையின் அரசு முதன்மை செயலாளர்,
 • போக்குவரத்து துறையின் அரசு முதன்மை செயலாளர்,
 • வருவாய் நிர்வாக ஆணையர்,
 • காவல்துறை தலைமை இயக்குநர்,
 • மருத்துவ கல்வி இயக்குநர்,
 • பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் இயக்குநர்,
 • மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர்,
 • தென்னக இரயில்வே பொது மேலாளர்,
 • சென்னை விமான நிலைய இயக்குநர்,
 • சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர்
 • பொது சுகாதாரத் துறையின் சார்பாக வல்லுநர் ஒருவரும்,
 • தனியார் துறை சார்பாக வல்லுநர் ஒருவரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இச்சிறப்பு பணிக்குழு, அவ்வப்போது சந்தித்து, அரசு வழங்கும் உத்தரவுகளை சரியான முறையில் அமல்படுத்தப்படுகின்றதா என்பதை தீவிரமாக கண்காணித்து, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தமிழ்நாட்டில் முழுமையாக தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *