இந்தி மொழியை கற்பதில் தவறில்லை-பிரபல தயாரிப்பாளர்
சென்னை, செப்டம்பர்-27
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜா, இந்தி மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக ஞானவேல்ராஜா திகழ்ந்து வருகிறார். திரைப்படவிழா ஒன்றில் கலந்துகொண்ட ஞானவேல்ராஜா இந்தி மொழி குறித்து பேசியுள்ளார். மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை என்றும், கூடுதலாக ஒரு மொழியை தெரிந்துகொள்வதில் எந்த தவறும் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு மொழியினால் மற்றொரு மொழி அழியும் என ஒரு கும்பல் தவறாக பிரச்சாரம் செய்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணமாகதான் 90 சதவீத தமிழர்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை பற்றி தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். தயாரிப்பாளரின் இந்த பேச்சு சமூக வளைதலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.