தமிழக மாணவர்கள் 180 பேர் நாடு திரும்ப முடியாமல் மலேசியாவில் தவிப்பு

பிலிப்பைன்சில் மருத்துவம் பயிலும் 180 தமிழ் மாணவர்கள் :  நாடு திரும்ப முடியாமல் தவிப்பு

கோலாலம்பூர்.மார்ச்.17

பிலிப்பைன்சில் மருத்துவம் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த 180 பேர் உள்ளிட்ட 250 இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல்  மலேசிய விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்சில் மருத்துவம் பயின்று வரும் 250 இந்திய மாணவர்கள் அங்கிருந்து  மலேசியா வழியாக தாயகம் திரும்ப முடிவு செய்து புறப்பட்டனர். 3 விமானங்களில் மலேசியா வந்தடைந்த மாணவர்கள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். விமான சேவை நிறுத்தப்பட்டதால்  அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல்  தவித்து வருகின்றனர். இதில் 180 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வரும் மாணவர்களை  மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதே போல் பிலிப்பைன்ஸ் தலை நகர் மணிலாவில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்  தவித்து வருவதகாவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *