கொரோனா இல்லை அது ‘சீன வைரஸ்’ என்ற டிரம்ப் கருத்தால் சர்ச்சை

கொரோனாவை சீன வைரஸ் என்று குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி,அமெரிக்கா என நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவில் 93 பேர் இந்நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் சீன வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஏர்லைன்ஸ் மற்றும்  தொழில் நிறுவனங்களுக்கு  தேவையான உதவிகளை  செய்யத் தயார் என்று கூறியுள்ளார். ஏற்கனவே வெளிநாட்டு வைரஸ் என்று குறிப்பிட்டிருந்த டிரம்ப் தற்போது சீன வைரஸ் என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *