கொரோனாவால் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை.மார்ச்.17

கொரோனா அச்சுறுத்தலால் சட்டப்பேரவை  ஒத்திவைக்கப்படாது  என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினரும் எதிர்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் காரணமாக சட்டப்பேரவையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு விளக்கம்  அளித்து பேசிய முதலமமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோன வைரஸ் பரவுவதை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படுகிறது. உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில்  முழு வீச்சுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நடைபெறுகிறது. உறுப்பினர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, சட்டப்பேரவைக்கு வரும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே சட்டப்பேரவையை ஒத்தி வைக்கத் தேவையில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *