கொரோனா தடுப்பு நடவடிக்கை : திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் 31ந் தேதி வரை ரத்து

சென்னை.மார்ச்.17

கொரோனா நோய் தடுப்பு நடிவடிக்கையா திமுக பொதுக்குழு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் மார்ச் 31 வரை ரத்து செய்யப்படுவதாக  அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 31ம் தேதி வரை ஒத்தி வைத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் வரும் 29-ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *