கொரோனா வைரஸ் : ஐரோப்பிய பயணிகள் இந்தியா வர தடை

டெல்லி.மார்ச்.17

கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கையாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள்  இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக, மார்ச் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் கல்லூரிகள், நீச்சல் குளங்கள், மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களை மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், துருக்கி,இங்கிலாந்து உள்ளிட்ட  நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாளைமுதல் இந்தியா வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வழியா மார்ச் 31-ம்தேதி வரை பயணிகள் இந்தியா வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *