தங்கம் விலை உயர்வு

செப்டம்பர்-27

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 28,792 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் வெள்ளி கிழமை (27.09.2019) ஆபரண தங்கத்தின் விலை 28 ஆயிரத்து 792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது முதல் நாள் இறுதியில் இருந்த விலையைவிட 24 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்ந்து, 3,599 ஆக உள்ளது. அதேபோன்று, வெள்ளி கிராமுக்கு 3 காசுகள் உயர்ந்துள்ளது.  சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 50 ரூபாய் 08 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி 25 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரத்து 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *