கொரோனா வைரசை கட்டுப்படுத்த சிறந்த யோசனை கூறினால் பரிசு: பிரதமர் மோடி அறிவிப்பு

 டெல்லி.மார்ச்.17

கொரோனா  வைரசை கட்டுப்படுத்த சிறந்த யோசனை கூறினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது.இந்நோய் பாதித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், கொரோனோ வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த சிறந்த யோசனைகளை  பகிருங்கள் என்றும் கொரோனா தெடார்பாக சிறந்த தீர்வு தந்தால் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஆஸி பிரதமர் பாராட்டு

இதனிடையே கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த  சார்க் நாடுகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அழைப்பு விடுத்தார். அதனையேற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர்.இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக ‘ஜி-20’ நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்க பிரதமர் மோடி முயற்சிப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.பிரதமர் மோடியின் முயற்சிக்கு தான் ஆதரவு அளிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் மோரிஸன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *