தமிழகத்தில் 7500 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் உள்ள 7500 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை.மார்ச்.17

சட்டப்பேரவையில்  இன்று திமுக  உறுப்பினர்  டி.ஆர்.பி.ராஜா ஸ்மார்ட் வகுப்புகள் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுமா என்று எழுப்பிய கேள்விக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அப்போது, தமிழகத்தில் 7500 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *