மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக,திமுக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

சென்னை.மார்ச்.16

மாநிலங்களவையில் போட்டியிடுவதற்காக  வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக,திமுக வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் காலியாக உள்ள 55 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது.


தமிழகத்தில் காலியாகும் 6 புதிய உறுப்பினர் பதவிக்கு  தி.மு.க. சார்பில், திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் 9-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர்களான தம்பி துரை, கே.பி.முனுசாமி கூட்டணியை சேர்ந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் 12-ந்தேதியும் மனு தாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க. அதன் கூட்டணி மற்றும் தி.மு.க. சார்பில் தலா 3 பேர் வீதம் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். சுயேட்சைகள் 3 பேரும் வேட்பு மனு அளித்தனர். 13-ந்தேதியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.

தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை செயலாளர் அறையில் இன்று வேட்பு மனுக்களின் பரிசீலனை நடந்தது.

அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 18-ந்தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கே 6 வேட்பாளர்களும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *