கொரோனா வைரஸ்:தமிழகத்தில் பள்ளிகள்,கல்லூரிகள், திரையரங்குகள், விடுதிகள், மூடல்

சென்னை.மார்ச்.16

கொரோனா வைரஸ் பரவிவருவதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள்,திரையரங்குகள், கேளிக்ககை அரங்குகளை  மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் தொடங்கி 100 மேற்பட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர்களுக்க இந்நோய் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்  தமிழக அரசு  கொரோனா வைரஸ் பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள், பார்கள் , விளையாட்டு அரங்குகள், கண்காட்சி,உயிரியல் பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள்,மால்களையும் தனியார் உள்ளிட்ட பள்ளிகள்,கல்லூரிகள் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் (மார்ச்-17)  நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 10,12ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா குறித்து வீண் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *