கொரோனா வைரஸ் : தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தம்

சென்னை.மார்ச்.16

கொரோனா வைரஸ் பரவிவருவதன் காரணமாக மார்ச் 19-ம் தேதி முதல் தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என இயக்குநர் ஆர்.கே. செல்வமணி  தெரிவித்துள்ளார்.

 சென்னை வடபழனியில் இன்று  செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி, கூறியதாவது:

மார்ச் 19-ம் தேதி முதல் அனைத்துவிதமான தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும். சின்னத்திரைப் படப்பிடிப்புகளையும் நிறுத்த வேண்டுகோள் விடுத்துள்ளோம். மறு அறிவிப்பு வரும் வரை படப்பிடிப்புகள் நடைபெறாது. படப்பிடிப்பு தொடர்பான எந்தப் பணிகளிலும் நடைபெறாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *