2-ம் பருவ புக்ஸை 30-ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை

செப்டம்பர்-27இரண்டாம் பருவ புத்தகங்கள் செப்.30-க்குள் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முப்பருவ கல்விமுறை அமலில் உள்ளது. தற்போது, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதல் பருவம் முடிந்து காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. அக்டோபர்.3-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில், தற்போது வரை 6 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவத்திற்கான குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகளை தடுக்கும் விதமாக செப்டம்பர்-30 தேதியே அனைத்து பள்ளி மற்றும் வகுப்புகளுக்கும் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ இலவச நோட்டு, புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணாவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளே விநியோகிக்க ஏதுவாக, வரும் 30-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் இலவச நோட்டு மற்றும் பாடப்புத்தகங்களை வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *