100 நாள் வேலை சம்பளம் வங்கியில் செலுத்துவது ஏன்? திமுகவுக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம்

சென்னை.மார்ச்.16

100  நாள் வேலை சம்பளம் வங்கியில் செலுத்துவது பற்றி  நாடாளுமன்றத்தில் பேசுங்கள் என எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனுக்கு முதலமைச்சர்  பழனிசாமி அதிரடியாக பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் இன்று உள்ளாட்சித்துறை மானியத்தின் மீதான கோரிக்கையில் திமுக உறுப்பினர்களின் கேள்விக்கு  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்துப் பேசினார். அப்போது தி.மு.க. துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்பவர்கள் அன்றாடங் காட்சிகள். அவர்கள் எப்படி போய் பணத்தை வங்கியில் எடுப்பார்கள். அவர்களுக்கு நேரில் பணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.இதற்கு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

இவையெல்லாம் நாடாளுமன்றத்தில் நீங்கள் பேச வேண்டும். உங்களிடம் 38 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இங்கே இதனை பேசுவதை விடுத்து அங்கே உங்கள் எம்.பி.க்களை பேச சொல்லுங்கள். மத்திய அரசு சில வழிமுறைகளை சொல்லியிருக்கிறது. ஊதியத்தை நேரிடையாக வங்கியில் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது. எனவே அங்கு செலுத்தப்படுகிறது. எங்களிடம் கொடுத்து கொடுக்க சொன்னால், நேரிடையாக கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார். திமுக கொறாடா சக்கரபாணி எழுந்து எங்களது உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்கள் என்று கூறியபோது, மீண்டும் குறுக்கிட்ட முதலமைச்சர், நாங்கள் 38 எம்.பி.க்கள் முன்பு இருந்தபோது, என்ன செய்தீர்கள், என்ன செய்தீர்கள் என்று கேட்டீர்கள். இப்போது நீங்கள் 38 பேர் இருக்கிறீர்கள். ஏழை, எளிய மக்களின் பாதிப்பை எடுத்து சொல்லி அவர்களுக்காக வாதாடி பெற்று தாருங்கள். எனக்கு தெரிந்தவரை நீங்கள் நாடாளு பேசியதாக தெரியவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *