கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தீவிரவாதிகள் ஊடுருவல் – உளவுத்துறை எச்சரிக்கை

கோவை.மார்ச்.16

கோவை, திருப்பூர்  மாவட்டங்களில்  தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக  உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தேசிய அளவில் செயல்படும், மதவாத இயக்கம் ஒன்றில் ஆயுதப் பயிற்சி பெற்ற நபர்கள் கோவை மற்றும் திருப்பூரில் ஊடுருவி முக்கிய வழிபாட்டு தலங்களை தாக்கவோ அல்லது குறிப்பிட்ட மத இயக்க தலைவர்களை கொல்லவோ, திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு  நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து இந்த இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயரதிகாரிகள் முன்னெச்சரிக்கை  செயல்பட்டு, சரியான பாதுகாப்பு திட்டங்களை உடனடியாக வகுக்க வேண்டும்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சோதனைச் சாவடிகள், ரயில்வே நிலையங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவும் பொது இடங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பினை பலப்படுத்தவும் மறு உத்தரவு வரும் வரை உஷார் நிலையை கடைபிடிக்கவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *