கொரோனா வைரஸ்: டெல்லியில் 50 பேருக்கு மேல் கூட்டமாக கூடத்தடை

டெல்லி.மார்ச்.16

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் 50 பேருக்கு மேல் கூட்டமாக கூடத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இரவு விடுதிகளையும் 31-ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

 இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 2 பேர் டெல்லி, கர்நாடகா உயிரிழந்துள்ளனர். மேலும், 120 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

”டெல்லியில் மதம், சமூகம், பண்பாடு மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூட வரும் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், திருமணம் உள்ளிட்ட விழாக்களை சிறிது காலம் தள்ளிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் பயிற்சி நிலையங்கள், இரவு விடுதிகள், ஸ்பா உள்ளிட்டவை வரும் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும். 50 பேருக்கு மேல்  கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *