அக். 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை…

சென்னை, செப்டம்பர்-27

அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த ஜூன் 1 முதல் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 38 செ.மீ எனவும், இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 33 செ.மீ எனவும் கூறிய அவர், இயல்பைவிட இம்முறை 16 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக கூறினார். சென்னையில் ஜூன் 1 முதல் பெய்த மழையின் அளவு 59 செ.மீ. எனவும், இதன் இயல்பு அளவு 42 எனவும் இது இயல்பை விட 39 விழுக்காடு அதிகம் எனவும் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இயல்பை விட தமிழகம் மற்றும் புதுவையில் மழை அதிகமாக பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் மாதம் முதல் இன்று வரையில் வழக்கதை விட 53 சதவீதம் இயல்பைவிட அதிகம் என குறிப்பிட்டார்.

மேலும், தெற்காசிய நாடுகளுக்கான வடகிழக்கு பருவமழையின் முன்னறிவிப்பினபடி இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளுக்கு வடகிழக்கு பருவமழை இயல்பு அளவை ஒட்டியே இருக்கும் எனவும் கூறினார். அதாவது தென் மேற்கு பருவமழையானது அக். மாத முதல் இரண்டு வாரங்களில் தொடரவுள்ளதால் மூன்றாவது வாரத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *