திமுக பொருளாளர் பதவியிலிருந்து துரை முருகன் விலகல்

சென்னை.மார்ச்.16

திமுக பொருளாளர் பதவியிலிருந்து  துரைமுருகன் விலக  விருப்பம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளராக இருந்து க.அன்பழகன் மறைந்த நிலையில்  புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான பொதுக்குழுக் கூட்டம் வருகிற 29ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  காலை 10 மணிக்கு கலைஞர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக.வின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், கட்சியின் பொருளாளராகவும் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவராகவும் உள்ள துரை முருகன்தான் பொதுச்செயலாலர் பதவிக்கு வருவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் பொருளாளர் பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்து கட்சியின் ம் துரை முருகன் கொடுத்த கடிதத்தை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாகவும் திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர்  பதவியை துரைமுருகன்  விரும்புவதாகவும் அதனை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *