தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் சீர்திருத்த மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவை இன்று தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் பிப்.17ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 9 ஆம் தேதி மீண்டு தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது சனி,ஞாயிறு வார விடுமுறைக்கு பின்பு இன்று மீண்டும் கூடிய சட்டப்பேரவையில் தமிழ்வழிக் கல்வியில் முன்னுரிமை அளிக்கும் சீர்திருத்த மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்த இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.
இதன் மூலம் பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வழிவகை செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *