தங்கம் விலை மீண்டு உயர்வு : பவுனுக்கு ரூ.224 உயர்வு

 

சென்னை. மார்ச்.16

இறங்கு முகமாக இருந்த தங்கம் விலை மீண்டு உயர்ந்துள்ளது, இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.224 அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி தொழில் மற்றும் வர்த்தக துறைகளில் தேக்க நிலை  , தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள்   நிலவுகிறது.

 சென்னையில் கடந்த 3  நாட்களாக இறங்கு முகத்தில்  இருந்த தங்கம் விலை இன்று  மீண்டும் உயர்ந்துள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.3962-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.31696-க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் 33272 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 பைசா குறைந்து 43.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *