கொரோனா அச்சுறுத்தல்: ஈரானில் இருந்து மேலும் 53 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

ஜெய்ப்பூர்.மார்ச்.16

கொரோனா தாக்கம் உள்ள ஈரான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 53 இந்தியர்கள் இன்று ராஜஸ்தானுக்கு வந்து சேர்ந்தனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா தாக்கம் உள்ள நாடுகளில் உள்ள இந்தியர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில் ஈரான் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்தி வெளியுறவுத்துறை ஈடுபட்டு வருகிறது

.ஏற்கனேவே 230 இந்தியர்கள் ஈரானில் இருந்து மீட்கபட்ட நிலையில் 4வது குழுவினர் இன்று அங்கிருந்து தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு கொரோனா குறித்து முதற்கட்ட ஸ்கிரீனிங் சோதனை செய்யப்பட்டது. அவர்கள் கொண்டு வந்த லக்கேஜ்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.அதன் பின்னர் அவர்கள் ராணுவ நலவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *