இந்தியாவில் இருந்த நாட்கள் அற்புதமானவை, மோடியுடன் இருப்பதை மிகவும் விரும்பினேன்: டிரம்ப்

வாஷிங்டன்.மார்ச்.14

இந்தியாவில்  இரண்டு நாட்கள்   இருந்ததை மிகச் சிறந்த தருணமாக கருதுவதாகவும்   பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரத்தை செலவிடுவதை விரும்பியதாகவும் அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப்  கூறியுள்ளார்.

 அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப்   இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கடந்த  பிப்ரவரி மாதம் 24 ந் தேதி, மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன்  இந்தியா  வந்தார். அகமதாபாத்தில் நடந்த ” நமஸ்தே டிரம்ப் ” நிகழ்ச்சியில்  பேசிய டிரம்ப் பின்னர், தாஜ்மஹாலைப் பார்வையிட்டார். பின்னர் டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மனைவியுடன் சென்று மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் சனிக்கிழமை வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவில் இருந்த இரண்டு நாட்களும் எங்களுக்கு மிகவும் சிறப்பான தருணம் அற்புதமானவை என்றார். பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். இந்திய மக்களுக்கும், அவர் நண்பராக உள்ளார். அவருடன் செலிவிட்ட நேரம் எனக்கு பிடித்தமானதாக இருந்தது. இருவரும்  மேற்கொண்ட ஆலோசனையில் எல்லாவற்றையும் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தியதாக டிரம்ப் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *