திண்டுக்கல்லில் புதிய மருத்துவ கல்லூரி : முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

திண்டுக்கல்.மார்ச்.14

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.340 கோடியில் அமைய உள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

திண்டுக்கல்லில் 340 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் மருத்துவ கல்லூரிக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், 25 ஆயிரத்து 613 பயனாளிகளுக்கு 64 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *