சிறை வைக்கப்பட்டுள்ள உமர் அப்துல்லா, மெகபூபா முப்தியை விடுவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை.மார்ச்.14

காஷ்மீர் பிரச்சனையில் சிறை வைக்கப்பட்டிருந்த டாக்டர் பாரூக் அப்துல்லா  காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வரவேற்றுள்ளார்.

இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில்,  காஷ்மீரில் சிறைவைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பாரூக் அப்துல்லா  காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். பாரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டது ஜனநாயகம் மீதான நம்பிக்கையை நிரூபிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

மேலும் மத்திய அரசால் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள உமர் அப்துல்லா, மெகபூபா முப்தியை விடுவிக்க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *