இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 85ஆக உயர்வு: 2 பேர் உயிரிழப்பு


டெல்லி.மார்ச்.14

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது, 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் 5000க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 85 பேருக்கு கொரோனா வைரஸ்  பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.   2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதில் ராஜஸ்தானில் 17, கேரளாவில் 17, மகாராஷ்டிராவில் 19, உத்தரபிரதேசத்தில் 11, டெல்லியில் 6, ஆந்திராவில் மற்றும் கர்நாடகாவில் தலா 4 பேர், லடாக் 3, காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் தலா இருவர் என கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லி,
உத்திரப்பிரதேசம், பீகார், ஒடிசா, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. ஒடிசா மாநில அரசு  கொரோனா வைரவை பேரிடராக அறிவித்துள்ளது.

திருப்பதி கோயிலிலும் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது,பக்தர்கள் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 76 வயது முதியவர் கொரோனாவல் உயிரிழந்ததை அடுத்து அங்கு வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், விழாக்கள் அனைத்தும் ஒருவாரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கலாபுராகி நகரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *