குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச்- 20 முதல் கலந்தாய்வு : டிஎன்பிஎஸ்சி

சென்னை.மார்ச்.13

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்  குரூப் 4  தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு. மார்ச் 20 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 01.09.2019 அன்று 9300  அரசு பணியிடங்களுக்கான குரூப்- 4 தேர்வு   நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்  12.11.2019 அன்று வெளியிடப்பட்டது.  இதனைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மார்ச் 20-ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும் இதற்கான அழைப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது.

இதேபோல் சுருக்கெழுத்து, தட்டச்சர்  ஆகியோருக்கான குரூப் III பதவிக்கான கலந்தாய்வு, ஏப்ரல் 02-ம் தேதி முதல் 07-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வானவர்கள், விவரங்கள் அடங்கிய அழைப்பாணைக் கடிதத்தை  டிஎன்பிஎஸ்சி  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *