கொரோனா அச்சுறுத்தல் : ஈரானில் இருந்து மேலும் 44 பேர் இந்தியா திரும்பினர்

மும்பை.மார்ச்.13

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஈரானில் தவித்த வந்த  மேலும் 44 இந்தியர்கள் இன்று  தனி விமானம் மூலம் மும்பை  அழைத்து வரப்பட்டனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது, கொரோனா வைரஸ் பாதித்த சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனா, இத்தாலியை தொடர்ந்து ஈரானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஈரானில் வசித்து வரும் இந்தியர்களை இந்தியா அழைத்து வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை  ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்டுவர துரித நடவடிக்கை மேற்கொண்டது.  முதல் கட்டமாக விமானப்படை விமானம் மூலம் கடந்த 10ந் தேதி ஈரானில் இருந்து  58 இந்தியர்கள் காசியாபாத்துக்கு  அழைத்து வவரப்பட்டனர்.   இதனைத் தொடர்ந்து இன்று ஈரானிலிருந்து மேலும் 44 இந்தியர்கள் விமானம் மூலம் மும்பைக்கு  அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் (COVID-19) சோதனைக்காக  மும்பை புறநகர் பகுதியான கட்கோபரில் உள்ள ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து கூறிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரானில் உள்ள மற்ற இந்தியர்களை கொண்டுவருவதற்கான முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மீட்பு நடவடிக்கையில், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் மருத்துவக் குழுவினர், ஈரான் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயலாற்றி வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *