கொரோனாவை எதிர்கொள்ள தெற்காசிய நாடுகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் : பிரதமர் மோடி

டெல்லி.மார்ச்.13

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட தெற்காசிய நாடுகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர  மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா வைரஸை எதிர்த்து அனைத்து நாடுகளும் அரசுகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன, பொது மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு சார்க் நாடுகளின் தலைமை ஒரு வலுவான திட்டத்தை உருவாக்க வேண்டும் , அனைத்து குடிமக்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, வீடியோ கான்பரன்சிங் மூலம் விவாதம் நடத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உலக மக்கள்தொகையில்  அதிகமான மக்கள் தொகையை கொண்ட தெற்காசிய நாடுகள், நமது குடிமக்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கு எவ்வித சமரசமும் இன்றி  உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *