கொரொனா வைரஸ் : டெல்லியில் ஐ.பி.எல்.போட்டிகளுக்கு தடை

 

டெல்லி.மார்ச்.13

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்த அனுமதி கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும்  பரவிவருகிறது. கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 78 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  தலைநகர் டெல்லியில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீச்சல் குளம், திரையரங்குகள்,பூங்காக்கள், உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஐபிஎல் போட்டியை நடத்த அனுமதிக்க முடியாது என்று அம்மாநில துணை முதலமைச்சர் சிசோடியா தெரிவித்துள்ளார். 13 வ து ஐபிஎல் போட்டிகள்  மார்ச் 29 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கான  விசா அனுமதியை இன்று முதல் ஏப்ரல் 15 ந் தேதி வரை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இதனால் ஐ.பி.எல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து  சனிக்கிழமை நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் முடிவெ செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *