கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கர்நாடகாவில் பள்ளிகள் மூடல்

பெங்களூரு.மார்ச்.13

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் கொரோனா வைரஸ் பாதித்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  சீனாவில் தொடங்கி இத்தாலி,அமெரிக்கா,ஈரான் என உலகையே அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸ்  நோயால் இந்தியாவில் 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *