என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் என்ன? சட்டப்பேரவையில் ஸ்டாலின்

 சென்னை.மார்ச்.13

தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சட்டப்பேரவையில்  இன்றைய கேள்வி நேரத்தின் போது,  தேசிய மக்கள் தொகை பதிவேடு(என்.பி.ஆர்) தொடர்பான் விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.  தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் என்ன என்றும் ஆவணங்கள் எதுவும் கேட்கப்படவில்லை என்றால் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியது ஏன் என்றும் ஸ்டாலின் வினவியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *