கொரோனா வைரசால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு: 78 பேர் பாதிப்பு

டெல்லி.மார்ச்.13

கர்நாடகாவில் 76 வயதான முதியவர்  உயிருழப்புக்கு கொரானா வைரஸ் பாதிப்பு தான் காரணம் என்பதை மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி  உள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய கர்நாடகா மாநிலம் கல்புர்கியை சேர்ந்த முகமது உசைன் சித்திக் என்ற 76 வயது முதியவருக்கு, கொரோனா அறிகுறி தென்பட்டது. ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 11ந் தேதி உயிரிழந்தார். இது குறித்து கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள  டுவிட்டர் பதிவில், கோவிட்-19 வைரஸ் சந்தேக அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற கல்புர்கியை சேர்ந்த 76 வயது நபர் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தி பிற நடைமுறைகளை மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

இதனை மத்திய சுகாதராத்துறையும் உறுதி செய்துள்ளது, இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு  முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாடு  முழுவதும் 78 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *