என்.பி.ஆர் விவகாரத்தில் திமுக.வினர் மக்களை தூண்டி விடுகின்றனர் : முதலமைச்சர் பழனிசாமி கண்டனம்

 சென்னை.மார்ச்.13

என்.பி.ஆர் விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி வருவதாக   முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வியாழன்று  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்   என்.பி.ஆர் குறித்த தமிழக அரசின் கடிதத்திற்கு மத்திய அரசின் பதில் கிடைக்காததால், தமிழகத்தில் என்பிஆர் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இந்நிலையில்  சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்திற்கு பிறகு,  இந்த பிரச்சனை தொடர்பாக திமுக உறுப்பினரும் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான  துரைமுருகன் உரிமை மீறல் கொண்டு வந்தார். சட்டசபையின் விதியை மீறி  அமைச்சர்  உதயகுமார்  செயல்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய சபாநாயகர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதில் எந்த உரிமை மீறலும் இல்லை என்று தெரிவித்தார். இந்த பிரச்சனை தொடர்பாக பேசிய முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அமைச்சர் உதயகுமார் என்.பி.ஆர் நடைமுறை  தமிழகத்தில் தற்போது   தொடங்காது என்று கூறிய  நிலையில, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். வேண்டும் என்றே மக்கள் மத்தியில்  பதற்றத்தை உருவாக்கி வருவதாகவும்,உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், என்.பி.ஆர். கணக்கெடுப்பை நிறுத்தி வைப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதை  வரவேற்பதாகவும், என்.பி.ஆர். கணக்கெடுப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *