காட்டுமன்னார் கோவிலில் ரூ.300க்கு போலி ஸ்மார்ட் கார்டு விற்பனை

 

கடலூர்.மார்ச்.13

காட்டுமன்னார்கோவிலில் 300 ரூபாய்க்கு  போலியாக பொதுவிநியோக திட்டத்திற்கான ஸ்மார்ட் கார்டை அச்சடித்து விற்பனை செய்த தனியார் கணினி மையத்தில் சோதனை செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்.எம்.எஸ் என்ற தனியார் கணினி மையம், ரேஷன் கார்டுகள் தயார் செய்து ஸ்மார்ட் கார்டுகளை அச்சடித்து கொடுப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ன்பு ஆர்.எம்.எஸ் என்ற தனியார் கணினிமையத்தில்  

 இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆர்.எம்.எஸ் கணினிமையத்திற்கு சென்று தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில், தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் சாருலதா மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் போலியாக ஸ்மார்ட் கார்டுகள் தயாரித்து கொடுப்பது  கண்பிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த பார்கோடு ரீடருடன் ஏராளமான போலி ரேஷன் அட்டைகளை கைப்பற்றிய வட்ட வழங்கல் அலுவலர் சாருலதா, இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். கணினிமையத்தின் சுவற்றில் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் தயார்செய்து தரப்படும் என்பதை துண்டு பிரசுரமாகவே ஒட்டிவைத்திருந்தனர்.

காவல் துறையினர் விசாரணையில் சட்ட விரோத ரேஷன் கார்டு தயாரிப்பு உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக போலி ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பிரிண்டர், லேப்டாப், அச்சிடப்பட்ட 33 போலி ரேஷன் கார்டுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கடையின் உரிமையாளர் முகமது சம்ஜித் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக இந்த கடையை நடத்தி வருவதாகவும், இவருக்கு காட்டுமன்னார்கோவிலில் மேலும் 2 கடைகள் செயல்பட்டு வருவதும் தெரியவந்தது. கடந்த ஓராண்டாக தமிழக அரசு ஸ்மார்ட் குடும்ப அட்டை அச்சிடும் பணியை நிறுத்தியுள்ள நிலையில், இந்த கணினிமையத்தில் சட்டவிரோதமாக போலி கார்டுகள் தாயாரானது கண்டுபிடிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை அச்சிடும் பணி இன்னும் தொடங்கப்படாத நிலையில்  போலியாக ஸ்மார்ட் கார்டுகள் அச்சடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *