சீனாவில் கொரோனா வைரசை பரப்பியது அமெரிக்க ராணுவம்? புதிய புகார்

 

பீய்ஜிங்.மார்ச்.13

சீனாவுக்குள் அமெரிக்க ராணுவம்தான் கொரோனா வைரசைப் பரப்பியிருக்கலாம் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸோ லிஜியான் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து இயங்கும் சமூக ஊடகங்களில் இதுபோன்றதொரு புகார்கள் ஏற்கனவே பரவி வந்த நிலையில், கொரோனா வைரஸை அமெரிக்க ராணுவம் பரப்பியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை சீன அதிகாரியே கூறியுள்ளார்.

ஏற்கனவே, சீனாவின் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வூஹான் இறைச்சி சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட வன விலங்குகளின் இறைச்சியின் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸை வூஹான் வைரஸ் என்று அமெரிக்க அதிகாரிகள் அழைப்பதற்கு பதிலடியாக, சீன அதிகாரிகள் இதுபோன்றதொரு குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார்கள் என்றே கருதப்படுகிறது.

ஆனால் இதற்கு அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இது வூஹான் நகரில் இருந்துதான் பரவியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *