பெங்களூருவில் கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

பெங்களூரு.மார்ச்.13

கூகுள் நிறுவனத்தின் பெங்களூரு கிளையின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெங்களூருவில் செயல்பட்டு வரும் கூகுள் கிளை அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எந்தவொரு அறிகுறியும் தெரிய வரும் சில மணி நேரம் முன்பு அவர் எங்கள் பெங்களூரு அலுவலகத்தில் பணியில் இருந்தார். கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட அன்றிலிருந்து அந்த ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளோம். சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *