மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை.மார்ச்.12

கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்  மனித சமுதாயத்தை அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் 73 பேருக்கு கொரோன வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதம் முழுவதும் விடுமுறை அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளி முதல் உயர்நிலை பள்ளிகள்  விடுமுறை அறிவிக்க உத்தரவிடக் கோரி, சென்னை மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், குழந்தைகளையும் வயதானவர்களையும் கொரோனா நோய் எளிதில் தாக்குகிறது என்பதால், குழந்தைகளின் பாதுகாக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, 2019 – 20 ம் கல்வியாண்டு முடிவடையும் நிலையில் உள்ளதால், விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்திருந்தார்.


இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எந்த பள்ளியிலும், மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட மறுத்து விட்டனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள், அறிவுறுத்தினர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *