இந்தியாவில் 73 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி.மார்ச்.12

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. 

சீனா தொடங்கி இத்தாலி, அமெரிக்கா, ஈரான் என உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், பலர் உயிரிழந்து வருகின்றனர்.சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கியதில்  சுமார் 3,200 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் 4,500 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 1,21,312-ஆக உயா்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவில் கேரளா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி,காஷ்மீர் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.இந்த நிலையில்  இந்தியாவில் மேலும் 11 பேருக்கு  கொரோனா பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *