மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இ.பி.எஸ்,ஓ.பி.எஸ் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

மாநிலங்களைவையில் காலியாக உள்ள 55 இடங்களுக்கு மார்ச் 26ம்  தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல்  13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 16ஆம் தேதி வேட்புமனு சரிபார்ப்பு பணி நடைபெறும். 18ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள். மார்ச் 26ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கும் மாநிலங்களவைத் தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதையடுத்து மாலை 5 மணிக்குத் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மக்களவை முன்னாள் சபாநாயகர் மு.தம்பிதுரை ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்ச ஓ.பன்னீர்செல்வம்  முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் 3 பேரும் சட்டப்பேரவை செயலாளரும் மாநிலங்களவை தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *