அரசியலுக்கு இப்ப வர்ல…இளைஞர்கள் மத்தியில் எழுச்சி, மக்களிடம் புரட்சி ஏற்பட்டால் அப்ப வருவேன்… ரஜினி

சென்னை.மார்ச்.12

தமிழகத்தில் அரசியல் மாற்ற வேண்டும் என்று  இளைஞர்கள் மத்தியிலும் மக்களிள் மத்தியிலும் எழுச்சி ஏற்படும் போது  அரசியலுக்கு வருவேன் என்று  நடிகர் ரஜினிகாந்த்  தெரிவித்துள்ளார்.

 சென்னை லீலா பேலசில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, அரசியல் மாற்றத்துக்கு மூன்று திட்டங்கள் வைத்துள்ளேன், அதில் கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதுதான் மிக முக்கியமானதாகும். நான் ஒருபோதும் முதலமைச்சர் பதவியை விரும்பியதில்லை, இதை நான் அரசியலுக்காக பேசவில்லை. 2017 டிசம்பரில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தெளிவுப்படுத்தி உள்ளேன். அப்ப 66 வயதிலே பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.. இப்ப 71 வயசாகிவிட்டது…. நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர்கள் எனது மூன்றாவது திட்டத்தை யாரும் ஒத்துக்கொள்ள வில்லை. 50 வயதுக்கு உட்பட்ட இளைர்கள்  ஆட்சியில் அமரவேண்டும் அவர்களுக்கு கட்சியினர் ஆலோசனை வழங்குபவர்களாக குறை,நிறைகளை எடுத்துச் சொல்பவர்களாக, இருக்கவேண்டும் அப்போது தான் நல்லாட்சி அமையும்.

 தமிழகத்தில் இரண்டு மிகப்பெரிய அசுர பலம் வாய்ந்த கட்சிகள் உள்ளன, ஒருபக்கம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் முழு அரசியல் கட்டமைப்புடன் பணபலம், ஆள்பலம்  என்ற அசுர பலத்துடன் வாழ்வா சாவ என்ற நிலையில் வாரிசு என்பதை நிரூபிக்கும் நிலையில் ஒருகட்சி (திமுக) உள்ளது.

மற்றாருபக்கம்  ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு,குபேரன் கஜானாவை கையி வைத்துக்கொண்டு முழு கட்டமைப்புடன் ஆளுங்கட்சி (அதிமுக) உள்ளது. இவர்களுக்கு மத்தியில் சினிமாப்புகழ் ரசிகர்களை வைத்துக்கொண்டு நாம அரசியலில் ஜெயிக்கவேண்டும் என்பது சாதாரன விஷயமல்ல.

 தமிழகத்தில் இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளான கலைஞரும், ஜெயலலிதா அம்மாவும் தற்போது இல்லை… தமிழகத்தில் தலைமை என்பது வெற்றிடமாக உள்ளது.. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு இளைஞர்கள், பத்திரிகையாளர்கள், படித்தவர்கள் பாமர மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.  தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதை மூலை முடுக்கெல்லாம்  கொண்டு செல்லவேண்டும்.தமிழகத்தை தாண்டி இந்தியா வரை கொண்டு செல்லவேண்டும். என்னை வருங்கால முதல்வர் என்று கூறுவதை விடுத்து  கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதை  மக்களிடம்  தெளிவுப்படுத்த வேண்டும்.நான் மிகவும் மதிக்கும் விரும்பும் தலைவர் அண்ணா, அவர் பல தலைவர்களை உருவாக்கியவர்,அவர் உருவாக்கிய தலைவர்கள் தான் தமிழகத்தில் ஆட்சிநடத்தி உள்ளனர். தமிழ் மண் புரட்சியை ஏற்படுத்திய மண், காந்தி, விவேகானந்தர் போன்றோர் இங்கிருந்து தான் தொடங்கினார்கள். தமிழகத்தில்  இப்ப மாற்றம் ஏறபடவில்லை என்றால் எப்போதும் மாற்றம் ஏற்படாது. 54 ஆண்டு கால திராவிட ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில்,மக்கள் மத்தியில், 2201 ல் அரசியல் மாற்றம் என்ற எழுச்சி, புரட்சி, அதிசயம் உருவாக வேண்டும் அதைத் தான் நான்  விரும்புகிறேன். மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படும்போது அரசியலுக்கு வருவேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *