அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 6 லட்சம் வீடுகள்
சென்னை, செப்டம்பர்-27
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடிசை மாற்று குடியிருப்புகளுக்கான புதிய கட்டிடங்கள் ஒரு வருடத்தில் கட்டிதரப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.எ. புரத்தில் வள்ளீஸ்வரன் தோட்டத்தில் உள்ள குடிசை மாற்று கட்டிடங்களை துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆய்வு செய்து, அந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது, விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. ரவி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சேதமடைந்துள்ள 200 சதுர அடி வீடுகளை இடித்து 400 சதுர அடி வீடுகளாக கட்டித்தர அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதுவரை அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் 6 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவே வெற்றி பெறும் எனவும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். நம்பிக்கை தெரிவித்தார்.